Published : 28 Feb 2020 08:00 am

Updated : 28 Feb 2020 08:00 am

 

Published : 28 Feb 2020 08:00 AM
Last Updated : 28 Feb 2020 08:00 AM

இன்று என்ன நாள்: தி.ஜானகிராமன் பிறந்த தினம்

the-birthday-of-t-janagraman

தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் தேவகுடி என்னும் ஊரில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார்.

நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல துறைகளில் செயல்பட்டுள்ளார். 10 நாவல்கள், 5 குறுநாவல்கள், 15 சிறுகதை தொகுப்புகள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.


இவரது ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘உயிர்த்தேன்’ போன்ற நாவல்கள் பெரியளவில் பேசப்பட்டவை. இதில் மோகமுள் நாவல், இயக்குநர் ஞான ராஜசேரன் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது.

இவரது படைப்புகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளை குறித்து பேசக் கூடியவை. ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.


இன்று என்ன நாள்தி.ஜானகிராமன்பிறந்த தினம்தமிழ் இலக்கியம்நாவல்குறுநாவல்சிறுகதைகட்டுரைமொழிபெயர்ப்புசமூகப் பிரச்சினைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author