Published : 27 Feb 2020 10:47 AM
Last Updated : 27 Feb 2020 10:47 AM

பிஹார் மாநிலத்தில் கல்வித் துறைக்கு ரூ. 35 ஆயிரம் கோடி

பிஹார் மாநிலத்தில் 2019-20-ம் ஆண்டுக்காக பட்ஜெட்டை, முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் சுஷில் குமார் மோடி சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில், அதிகப்படியாக கல்வித் துறைக்கு ரூ.35,191 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சாலை வசதிக்காக ரூ.17,345 கோடி, சுகாதாரத் துறைக்காக ரூ.10,937 கோடி உட்பட பல்வேறு துறைகளுக்காக மொத்தம் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x