Published : 27 Feb 2020 09:26 AM
Last Updated : 27 Feb 2020 09:26 AM

சமூக பணிக்கும் மாணவர்கள் வரவேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். பல்கலை.யில் இருக்கும் வாய்ப்புகள் மூலம் முன்னேற வேண்டும். கல்வித் தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் அறிவிக்கும் திட்டங்களுடன் இணைந்து கொண்டு கல்வியை முதல் நோக்கமாக முன்நிறுத்த வேண்டும். கல்வியை தாண்டி மரம் நடுதல், நீர்நிலை தூய்மை ஆகிய சமூகப் பணிகளில்

பல்கலை.கள் சமூகத்தில் இருந்துதொடர்பில்லாமல் தனிமைப்பட்டு இருக்கும் அலங்கார டவராக இருக்கக் கூடாது. அறிவை உருவாக்கி, இணைத்து அடுத்த தலைமுறைக்குப் பகிர்வது அவசியம். பல்கலைக்கழகங்கள் மக்களின் சமூக வாழ்வுடன் இணைந்திருக்க வேண்டும்.

பாதி நேரம் வகுப்பறையிலும், மீதி நேரம் சமூகத்திலும் இருக்கவேண்டும். கிராம மக்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளுங்கள். விவசாயத்தை தெரிந்து கொள்ளுங்கள். உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி அவசியம். உலகெங்கும் உள்ளபுதிய வாய்ப்புகள் மற்றும் புது முயற்சிகளுக்கான கதவுகளை பல்கலைக்கழகங்கள். திறக்க வேண்டும்.

பட்டம் பெறுதல் ஒரு படிக்கட்டுதான். தற்போதைய உலகத்தில் மாற்றம் படுவேகமாக நிகழ்கிறது. அதற்கு ஏற்ப கல்விச் சூழலில் மாற்றம்கொண்டு வரவேண்டும். உலகநாடுகளுக்குச் சென்று பணிபுரியுங்கள், பொருள் ஈட்டுங்கள். ஆனால்,மீண்டும் திரும்பி வந்து தாய்நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்.

குழந்தைகளுக்குக் கல்வியில் உதவி செய்து வழிகாட்டுவதே ஆசிரியர்களின் முக்கியப் பணி. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ஆற்றுப்படுத்துவராகவும், நண்பராகவும் முன்மாதிரியாகவும் இருப்பது அவசியம்.

தாய்மொழிக் கல்வி அவசியம், கூடுதல் மொழிகளைக் கற்றறிவதில் தவறில்லை. பல்கலைக்கழக பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள். ஆங்கில முறையை இன்னும் கடைப்பிடிப்பது ஏன்? கதர், காதி, பட்டு என இந்தியா தொடர்பானதாக இருக்க வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x