Published : 26 Feb 2020 10:08 AM
Last Updated : 26 Feb 2020 10:08 AM

டெல்லி சபாநாயகராக ராம் நிவாஸ் 2-வது முறையாக தேர்வு

டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிக் கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆம் ஆத்மியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் 3-வது முறையாக டெல்லி முதல்வராக பிப்.16-ம் தேதி பதவியேற்று கொண்டார். இதனைத்தொடர்ந்து, 7-வது டெல்லி சட்டப்பேரவை அமைக்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் ஒருமனதாக ராம் நிவாஸ் கோயலை சபாநாயகராக தேர்வு செய்துள்ளனர். ராம் நிவாஸ்தான் கடந்த முறையும் டெல்லி சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவி வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x