Published : 25 Feb 2020 10:09 AM
Last Updated : 25 Feb 2020 10:09 AM

குஜராத் என்ஆர்டிஐ.யில் முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்

இந்திய ரயில்வே மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய ரயில் போக்குவரத்து நிறுவனத்தில் 2020-2021 கல்வியாண்டில் முதல் முதுநிலை பட்டப்படிப்பை தொடங்க உள்ளது.

ரயில்வே துறைக்காக நாட்டின் முதல்கல்வி நிறுவனமான தேசிய ரயில்போக்குவரத்து நிறுவனம் (என்ஆர்டிஐ) குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது போக்குவரத்து மேலாண்மை(பிபிஏ), போக்குவரத்து தொழில்நுட்பம்(பி.எஸ்சி) என்ற 2 இளநிலை பட்டப்படிப்பு உள்ளது.

இந்நிலையில், முதல் முதுநிலை பட்டமேற்படிப்பாக ரயில்வே அமைப்பின் பொறியியல் மற்றும் ஒருங்கிணைப்பு, 2020-21-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியன் ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார்யாதவ் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கரண்பில்லிமோரியா இணைந்து வெளியிட்டனர்.

இதுதொடர்பாக ரயில்வே தலைவர்வினோத் கூறுகையில், “போக்குவரத்தின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கக்கூடிய ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை உருவாக்குவது பிரதமர் மோடியின் கனவு. கடந்த சில ஆண்டுகளில், ரயில்வேயில் பலமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வேயை நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இந்திய ரயில்வே நீண்டகால தொடர்பை எதிர்பார்க்கிறது” என்றார்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,“என்ஆர்ஐடியில் இரண்டு முதுநிலை எம்.எஸ்சி மேற்படிப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஒருமாணவர் பல்கலை. மற்றும் என்ஆர்ஐடியில் ஒரு வருடம் படித்து, இரண்டு முதுநிலை பட்டங்களையும் பெறலாம்.

மேலும், ஆன்லைனில் முதுகலை சான்றிதழ் படிப்பு வசதியும் உள்ளது. அதேபோல், என்ஆர்டிஐயில் பயிலும் இளநிலை மாணவர்களுக்கு பர்மிங்காம் பல்கலை. பேராசிரியர்கள் பயிற்சிஅளிப்பார்கள். இதன்மூலம், 2 நிறுவனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ரயில்வே ஆராய்ச்சி, கல்வியில் உலக தரம் வாய்ந்த நிபுணத்துவம் பெறுவார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x