Published : 25 Feb 2020 10:06 AM
Last Updated : 25 Feb 2020 10:06 AM

போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி இறக்குவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கோப்புப் படம்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் மாநில, தேசியநெடுஞ்சாலைகளில், போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிஇறக்குவதை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் ஆகிய 7 வட்டங்களிலும் ஏராளமான தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்ல ஒவ்வொரு நிறுவனமும் சிறிய மற்றும் பெரிய பேருந்துகளை இயக்கி வருகின்றன.

வழித்தட வாரியாக இந்தப் பேருந்துகள் தினமும் காலை, மாலை இருவேளையும் இயக்கப்படுகிறது. இதுதவிர, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் சார்பிலும் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியரை அழைத்துச் செல்ல பேருந்துகள் வந்து செல்கின்றன.

பாதிப்பு ஏற்படாது

இவற்றில் பல வாகனங்கள் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளிலேயே நிறுத்தி மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்கின்றன. போக்குவரத்து குறைவான, ஆபத்தில்லாத பகுதிகளில்இவ்வாறு நிறுத்திச் செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், போக்குவரத்து அதிகமுள்ள, நெரிசல் மிகுந்த, ஆபத்தான பகுதிகளிலும் இவ்வாறே நிறுத்தி மாணவர்களை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றனர்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரணவகுமார் கூறும்போது, "மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் விரையும் இன்றைய சூழலில் இதுபோன்ற செயல் என்றாவது ஒருநாள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.

சில மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்து சென்று சாலையில் அகலம் மிக்க, ஆபத்தில்லாத பகுதியில் பேருந்துக்காக காத்திருப்பதில் எந்த சிரமமும் ஏற்பட்டு விடாது. இதை ஒவ் வொரு கல்வி நிறுவனமும் தங்கள் மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுநர் களுக்கும் சுற்றறிக்கையாக அறிவிக்க வேண்டும்.

விபரீதம் தவிர்க்க முடியும்

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், வட்டாரபோக்குவரத்து துறையும் நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துத் துறை சார்பில் வட்டங்கள் வாரியாக கல்வி நிறுவன வாகன ஓட்டுநர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புத்தாக்க மற்றும் மேம்பாட்டு பயிற்சியினை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விபரீதம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியும்"என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x