Published : 21 Feb 2020 10:34 AM
Last Updated : 21 Feb 2020 10:34 AM

மணிப்பூரில் கேள்வித்தாள் கசிந்ததால் பிளஸ் 1 தேர்வு ரத்து

இம்பால்

மணிப்பூரில் தேர்வுக்கு முன்பாகவேகேள்வித்தாள் வெளியானதால் 11-ம்வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநில மேல்நிலைக் கல்வி வாரியம் சார்பாக 11-ம்வகுப்புக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் மாநில மொழியான மணிப்பூரி தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்காகத் தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில், தேர்வுக்கு முன்பாகவே அனைத்து பாடங்களுக்குமான கேள்வித் தாள்கள் வெளியானது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கேள்வித்தாள்கள் பரவியதால், அதிர்ச்சியான கல்வி வாரியம், 11-ம் வகுப்பில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் தேர்வை ரத்து செய்தது. மறுத்தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x