Published : 21 Feb 2020 09:50 AM
Last Updated : 21 Feb 2020 09:50 AM

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பிளமிங்கோ பறவைகளை ரசித்த ராமேசுவரம் மாணவர்கள்

தனுஷ்கோடி கடற்பகுதியில் சுற்றித் திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேசுவரம் புதுரோடு அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

தமிழகத்தின் ராமேசுவரம், தனுஷ் கோடி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கடலூர்உள்ளிட்ட பகுதிகளுக்கு அன்டீன் பிளமிங்கோ, அமெரிக்கன் பிளமிங்கோ,சைலியன் பிளமிங்கோ, ஜாம்ஸெஸ் பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வலசை வருகின்றன. வடகிழக்கு பருவ மழை காலத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ததால் குளங்களில் போதிய அளவு தண்ணீர் உள்ளது.

3 முதல் 5 அடி உயரத்தில்...

இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி கடற்பகுதியில் தற்போது வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களிலிருந்து இருந்து பல்லாயிரம் மைல் தூரம் பறந்து தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளன. இந்தப் பறவைகள் 3 முதல் 5 அடி உயரத்தில், இளம் சிவப்புநிற கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன.

தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் பிளமிங்கோ பறவைகளை ராமேசுவரம் புதுரோடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் பார்த்து ஆய்வுசெய்தனர். மாணவர்களுக்கு ராமேசுவரம் வனத்துறை அதிகாரிகள் பிளமிங்கோ பறவைகள் குறித்தும் அவற்றின் இடபெயர்ச்சி, இனப்பெருக் கம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x