Published : 20 Feb 2020 10:03 AM
Last Updated : 20 Feb 2020 10:03 AM

பாம்பைப் பார்த்து புதிய ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது

நியூயார்க்

'Snake-inspired step-climbing robot developed'

New York

Inspired by how snakes move, engineers have created a robot that can stably climb large steps, an advance that may lead to better search and rescue robots that can successfully navigate treacherous terrain.

"We look to these creepy creatures for movement inspiration because they're already so adept at stably scaling obstacles in their day-to-day lives. Hopefully our robot can learn how to bob and weave across surfaces just like snakes," said study co-author Chen Li from The Johns Hopkins University.

Li said earlier studies had observed snake movements on flat surfaces, but rarely in 3D terrain except for on trees. According to him, until now engineers attempting to mimic snake movements have not accounted for real-life large obstacles such as rubble and debris that search and rescue robots would have to climb over.

Li and his team studied how the variable kingsnake -- commonly found living in both deserts and pine-oak forests -- climbed steps in the lab.
"These snakes have to regularly travel across boulders and fallen trees; they're the masters of movement and there's much we can learn from them," Li said.
They found that the snakes partitioned their bodies into three sections.

The front and rear body of snakes wriggled back and forth on the horizontal steps like a wave while their middle body section remained stiff, hovering just so, to bridge the large step, the researchers explained.

The wriggling portions, they said, provided stability to keep the snake from tipping over. Analyzing the videos, and noting how snakes climbed steps in the lab, the researchers created a robot to mimic the reptile's movements.

- PTI

பாம்பைப் பார்த்து புதிய ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது

பாம்புகள் ஊர்ந்து செல்லும் விதத்தைப் பார்த்து ஊக்கம் பெற்ற பொறியாளர்கள் புதிய ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோவால் நிதானமாகப் படிகளில் ஏற முடியும், அபாயகரமான நிலப்பகுதி களில்கூட பயணம் செல்ல முடியும்.

இந்த ரோபோவை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சென் லி கூறுகையில், “ஊர்ந்து செல்லும் உயிரினங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. ஏனென்றால் அவை அன்றாடம் பல குறுக்கீடுகளை அனாயாசமாகக் கடந்து செல்லும் உத்தியைக் கொண்டிருப்பவை.

நாங்கள் வடிவமைத்திருக்கும் ரோபோவும் பாம்பைப்போல கரடுமுரடான நிலப்பகுதிகளைக் கடந்து செல்லும்” என்றார். பாம்புகள் தட்டையான நிலப்பரப்பில் ஊர்ந்து செல்லும் விதம் குறித்த ஆய்வுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், இடிபாடுகளுக்கு இடையிலும், குப்பைகூளத்துக்கு உள்ளேயும் சென்று, செங்குத்தான பகுதிகளிலும் ஏறக்கூடிய மீட்புப் பணிக்கு உதவும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சி இது. அதற்காகத்தான் இடுக்கான நிலப்பரப்பில் பாம்பு ஊர்ந்து செல்லும் விதத்தை மீட்டுருவாக்கம் செய்யும் ரோபோ தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

பாலைவனத்திலும் பைன் - ஓக் மரங்களிலும் காணப்படும் பாம்புகளை இந்த ஆராய்ச்சிக்காக லி மற்றும் அவர் குழுவினர் கூர்ந்து கவனித்தனர். வழுவழுப்பான பாறைகளின் மீதும், முறிந்து விழுந்த மரங்களுக்கு இடையிலும் புகுந்து செல்லக்கூடியவை இந்த வகை பாம்புகள். எப்பேர்ப்பட்ட இடத்திலும் ஊர்ந்து செல்வதில் இவை கில்லாடி என்பதால் அவற்றிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்கிறார் லி.

தன்னுடைய உடலை மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு ஊர்ந்து செல்லும் வழக்கம் இந்த வகை பாம்புக்கு உள்ளது. அதன் தலைப் பகுதியும் வால் பகுதியும் அலை போல நெளிந்து வளைந்து செல்லும். மத்திய பகுதியோ விறைப்பாக இருக்கும்.

இப்படியாக அவை பெரிய அடியைக்கடந்து செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் வளைந்து கொடுக்கும் பாகங்கள்தாம் பாம்பு சரிந்து விழாதபடி அதனுடைய உடலுக்கு உறுதி அளிக்கின்றன. இப்படி இந்த வகை பாம்பின் நடமாட்டத்தை காணொளிகள் மூலம் கவனித்து அலசி ஆராய்ந்து அதன் மீட்டுருவாக்கமாக புதிய ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x