Published : 20 Feb 2020 09:06 AM
Last Updated : 20 Feb 2020 09:06 AM

டெல்லியில் கைவினைஞர் சந்தைக்கு பிரதமர் திடீர் பயணம்

டெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைஞர் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார்.

டெல்லி ராஜபாதையில் உள்ள பிரகதி மைதானத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கைவினைஞர் சந்தை (ஹுனர் ஹாட்) நடைபெற்று வருகிறது.

இதில் நாடு முழுவதிலும் இருந்து கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த சந்தை 27-ம் தேதி வரைநடைபெற உள்ளது.

அதிகாரிகள் வியப்பு

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்றுமத்திய அமைச்சரவை கூட்டத்துக் குப் பிறகு திடீர் பயணமாக இந்த சந்தைக்கு சென்றார். பிரதமரின் இந்தப் பயணம் பற்றி அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர்.

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்ட பிரதமர் கைவினை கலைஞர்களுடன் கலந்துரையாடினார். பாரம்பரிய கலைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை புதுப்பிக்க ‘ஹுனர் ஹாட்’ உதவுவதாக பிரதமரிடம் கலைஞர்கள் தெரிவித்தனர்.

பிறகு அங்குள்ள உணவகத்தில், ‘லிட்டி சோக்கா’ என்ற உணவை பிரதமர் உட்கொண்டார். கிழக்கு உ.பி., பிஹார் மற்றும் ஜார்க்கண்டில் இந்த உணவு பிரபலமானது. இதற்காக பிரதமர் ரூ.120 செலுத்தி னார்.

சுமார் 50 நிமிடங்கள்

பிறகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ்நக்வியுடன் சேர்ந்து மண் குவளையில் பிரதமர் தேனீர் அருந்தினார். இதற்காக பிரதமர் ரூ.40 செலுத்தினார். பிரதமர் வருகையை அறிந்தவுடன் அங்கு பார்வையாளர்கள் கூடத்தொடங்கினர்.

சுமார் 50 நிமிடங்கள் வரை அங்கிருந்த பிரதமர் பிறகு புறப்பட்டுச் சென்றார்.

சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் நலன் கருதி இதுபோன்ற சந்தைகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x