Published : 20 Feb 2020 08:25 AM
Last Updated : 20 Feb 2020 08:25 AM

தளி ஒன்றிய அரசு பள்ளிகளில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பரிணாம வளர்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அவரது உருவ முகமூடி அணிந்து வகுப்புக்கு வந்த தளி அரசு பள்ளி மாணவர்கள்.

ஓசூர்

தளி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சார்லஸ் டார்வின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தளிஒன்றியத்தில் அமைந்துள்ள சித்தாண்டபுரம்,ஏ.புதூர், சீங்கோட்டை, கெம்பக்கரை, பிலிகுண்டு ஆகிய மலைக் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் ‘பரிணாம வளர்ச்சியின் தந்தை' எனஅழைக்கப்படும் சார்லஸ் டார்வின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில்மாணவ, மாணவிகள் சார்லஸ் டார்வின்போல் முகமூடி அணிந்து கலந்து கொண்டனர்.

சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறு காணொலிக்காட்சி மூலமாக திரையிட்டு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கும் சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஓசூர் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x