Published : 19 Feb 2020 06:40 PM
Last Updated : 19 Feb 2020 06:40 PM

வளர்ந்து வரும் பொருளாதாரம்: முதல் 100 இடங்களில் 11 இந்திய பல்கலைக்கழகங்கள்

உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் முதல் 100 இடங்களில் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சீனா 30 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் 47 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் பிடித்துள்ளன.

மொத்தம் 533 பல்கலைக்கழங்களின் பட்டியலில் 56 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்தன. அதில் முதல் 100 இடங்களுக்குள் 11 இந்தியப் பல்கலை.கள் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய அளவில் 16-வது இடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஐஐடி இடம்பெற்றது.

''இந்தத் தரவரிசைப் பட்டியல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சியைக் காண்பிக்கிறது. இந்திய உயர் கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் உயர் சிறப்பு அந்தஸ்துத் திட்டம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று அறிவுத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற அமிர்த விஸ்வ வித்யா பீடம் முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x