Published : 19 Feb 2020 08:16 AM
Last Updated : 19 Feb 2020 08:16 AM

இந்திய பறவைகள் 79 சதவீதம் சரிவு: மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புலம்பெயரும் பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு (சிஎம்எஸ்) சார்பாக குஜராத்தில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பறவைகள் 2020 என்ற ஆய்வறிக்கையில், இந்திய பறவை இனங்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் பறவைகளின் எண்ணிக்கை சரிவடைந்தாலும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகின்றன.

மொத்தம் 867 இந்தியப் பறவைகளின் இருப்பை மதிப்பிடுகையில் தற்போதைய நிலவரப்படி 79 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. 101 உயிரினங்கள் ‘உயர் பாதுகாப்பு’ அளிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்திய மயிலின் எண்ணிக்கை மிகுதியாகவே அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்தியாவில் மயில்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகவும், இதனால் அதை முறையாக பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x