Published : 19 Feb 2020 08:12 AM
Last Updated : 19 Feb 2020 08:12 AM

டெல்லியில் கூடுதலாக 5 ஆயிரம் பேருந்துகள் இயக்க திட்டம்

புதுடெல்லி:

டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராகி உள்ளார். டெல்லியில் பேருந்து பற்றாக்குறையை குறைப்பதற்கு பொது போக்குவரத்து திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி வாக்குறுதி கொடுத்திருந்தது.

டெல்லியில் தற்போது 6 ஆயிரம் பேருத்துகள் இயங்கி வரும் நிலையில், கூடுதலாக 5 ஆயிரம் பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x