Published : 17 Feb 2020 08:00 AM
Last Updated : 17 Feb 2020 08:00 AM

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

வீடுகளாக மாறிவரும் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் மாசு காரணமாக சுத்தமான காற்றுக்கும், நீருக்கும் அலைவது, சாலை விதிகளை மதிக்காமல் மதிப்புமிக்க உயிரை இழப்பது உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து நாடகங்கள் மூலம் மதுரை பள்ளி மாணவ,மாணவிகள் விழிபு்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுரை வீரபாஞ்சான் லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்15-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ஜெ.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். எல்விஎஸ் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாகி செல்வி சந்தோசம், கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சீனிவாசன், இணை இயக்குனர் மைதிலி சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் ‘விளை நிலம் விரும்பு’, 4-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் ‘நிஜம்சொல்லப் போரேன்’, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் ‘சாலை விதிகளை மதிப்போம்’ ஆகிய விழிப்புணர்வு நாடகங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

விளைநிலம் விரும்பு நாடகத்தில் நாட்டில் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருவதையும், மண் வளத்தை குறைத்துகருவேல மரங்களை வளரவிடுவதால் பலன் தரும் தாவரங்கள் குறைவதும், பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக பொதுமக்களும், அப்பாவி கால்நடைகளும் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதையும், விளைநிலங்களை விரும்பி விவசாயம் செய்ய வேண்டும் என்பதையும் மாணவ, மாணவிகள் நடித்து உணர்த்தினர்.

‘நிஜம் சொல்லப் போரேன்’ நாடகத்தில், உயிர் வாழ முக்கியமான காற்றை வருங்கால சந்ததியினர் விலை கொடுத்து வாங்க வேண்டியது வரும், அறுசுவைகளையும் உண்டு மகிழ்ந்த காலம் மலையேறி மாத்திரை வடிவிற்கு உணவு மாறுவதும், வாழ தகுதியற்றதாக பூமியை மாற்றிவிட்டு, உயிர்வாழ மாற்றுக்கிரகத்தை தேடுவதையும், உயிரினங்கள் நீரின்றி தவிப்பதை தடுக்க என்ன செய்ய வேண்டும், எதிர்கால சந்ததியினருக்கு எப்படிப்பட்ட பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்பதை 4-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தத்ரூபமாக நடித்தனர்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மதிப்புமிக்க உயிர்களை இழக்க நேரிடாது என்பதை 8-ம் வகுப்புமாணவ, மாணவிகளின் நாடகம் எடுத்துரைத்தது. மனிதர்களின் கவனக்குறைவு, அலட்சியம், அதீவேகம்காரணமாக விபத்து நிகழும் போதுஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளை இழந்து தவிப்பதை தெருக்கூத்தின் வாயிலாக நடித்து காண்பித்தனர். முன்னதாக கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x