Published : 17 Feb 2020 07:09 AM
Last Updated : 17 Feb 2020 07:09 AM

மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்: நலத்திட்டங்களை செயல்படுத்த குழு அமைக்கவும் உத்தரவு

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கான கட்டமைப்பு வசதிகளை செய்துதரப்பட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உச்சநீதிமன்ற வழிகாட்தலின்படி ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கையை பாடவாரியாக யுஜிசிக்கு பதிவேற்றம் செய்யவேண்டும்.

மேலும், மாநில மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகத்துக்கும் மாணவர் சேர்க்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி முறையாகமாணவர் சேர்க்கை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுதிறனாளிகள் பயன்படுத்துவதற்கான பொதுக்கட்டட கட்டுமான விதிகளை சமூகநீதிமேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்பு கல்லூரிகளும் கட்டுமான விதிகளின்படி மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை https://ugc.ac.in/uamp/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x