Published : 14 Feb 2020 10:53 AM
Last Updated : 14 Feb 2020 10:53 AM

மொழிபெயர்ப்பு: இந்தியாவின் நிதியுதவியில் நேபாளத்தில் கட்டப்பட்ட புதிய கல்வி வளாகம்

காத்மாண்டு

New educational infrastructure built with Indian assistance inaugurated in Nepal

Kathmandu,

A new educational institution building built with Indian assistance for students from the economically weaker sections was inaugurated in a remote part of western Nepal on Wednesday, according to an official statement.

The new three-storey building with Indian assistance of Rs 2.5 crore is part of the Chandrakot Campus under the Tribhuvan University and is situated in Gulmi district.

The Chandrakot Campus was established in 2008 with an aim of imparting higher education to students who are unable to pursue their higher education in cities like Palpa, Butwal and Kathmandu due to poor economic conditions.

"The establishment of this campus is expected to help the economically poor and socially backward students, in particular girls' students, who were deprived of higher education in the absence of a college in the region," the statement said.

India has been involved in the development of several educational institutions in Nepal. A new school built with Indian grant of Rs 2. 4 crore was inaugurated in Nepal's Nuwakot district as part of its post-earthquake rehabilitation programme, according to the Indian mission.

- PTI

இந்தியாவின் நிதியுதவியில் நேபாளத்தில் கட்டப்பட்ட புதிய கல்வி வளாகம்

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் நேபாளத்தின் புறநகர் பகுதியில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டிடப் பணிக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது.

நேபாளம் குல்மி மாவட்டத்தில் உள்ள திரிபுவன பல்கலைக்கழகத்தில் சந்திராகோட் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கென இந்தியா ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்கியுள்ளது. காத்மாண்டு, பால்பா, புத்வால் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று உயர்கல்வி மேற்கொள்ள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் 2008-ம் ஆண்டில் சந்திராகோட் வளாகம் உருவாக்கப்பட்டது.

“தாங்கள் வசிக்கும் பகுதியில் கல்லூரி இல்லாத காரணத்தினால் உயர்கல்வி பெற முடியாத நிலையில் பல மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு உதவவே இந்த கல்வி வளாகம் எழுப்பப்பட்டுள்ளது” என்று பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியா பங்களித்து வருகிறது. நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பூகம்பம் புத்தாக்க நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக புதிய பள்ளி ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்குக்கூட இந்தியா ரூ.2 கோடியே 4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x