Published : 14 Feb 2020 08:31 AM
Last Updated : 14 Feb 2020 08:31 AM

சராசரி மாணவர்களுடன் சேர்த்து மாற்றுத் திறனாளி மாணவர்களை கையாளுவது எப்படி? - கோவையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

பயிற்சியில் பங்கேற்ற எஸ்எஸ் குளம் கல்வி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள். படங்கள்: த.சத்தியசீலன்.

கோவை

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் (இடைநிலை) சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ‘ஐஇடிஎஸ்எஸ்' என்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை உள்ளடக்கிய கல்வித்திட்டப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

இதன்படி கோவை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பேரூர்கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு குனியமுத்தூர் நேரு விமானப்படைவியல் கல்லூரியிலும், எஸ்எஸ் குளம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு டாக்டர் மகாலிங்கம் பொறியியல்கல்லூரியிலும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் கே.கண்ணன்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் கே.கண்ணன் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் உள்ளஅரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம்வகுப்புகளை நடத்தி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய கல்வித்திட்டம் என்ற தலைப்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சராசரி மாணவர்களுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் சேர்த்து கையாளுவது எப்படி? என்று பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பார்வை குறைபாடு உடையவர்கள், செவித்திறன் குறைபாடு உடையவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகளைக் கையாளுதல், கற்றல் குறைபாடு உடையவர்களை கையாளுவதற்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x