Published : 14 Feb 2020 08:26 AM
Last Updated : 14 Feb 2020 08:26 AM

வேதியியல் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம்- ஏஐடிசிஇ பரிசீலனை

சென்னை

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விதிகளை தளர்த்த ஏஐடிசிஇ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம் நாட்டில் 3,200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் பொறியியல் படிப்புகளுக்கு 13.2 லட்சம் இடங்கள் உள்ளன.

இதற்கிடையே வேலைவாய்ப்பு குறைவு உட்படபல்வேறு காரணங்களால் பொறியியல் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும்தேசியளவில் சுமார் 50 சதவீதபொறியியல் இடங்கள் நிரம்பவில்லை. இதையடுத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) செய்து வருகிறது. அந்தவகையில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏஐசிடிஇ உயரதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருந்தால் மட்டுமே பிஇ, பிடெக் படிப்பில் சேரமுடியும். இதை விதியை தளர்த்தி வேதியியல் பாடத்தை விருப்பப் பாடமாக மாற்ற பரிசீலனை செய்துவருகிறோம். அதாவது வேதியியல் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டியதில்லை.

அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், இயற்பியல் பாடங்களுடன் உயிரியல்,வேளாண்மை, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், வணிக ஆய்வுகள் போன்ற ஏதேனும் ஒரு விருப்பப் பாடத்தை சேர்த்து படித்திருந்தாலே சேரலாம்.

இந்த விவகாரத்தில் அனைத்துஅங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிடமும் கருத்துருகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த மாற்றம் அமலானால் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x