Published : 13 Feb 2020 11:18 AM
Last Updated : 13 Feb 2020 11:18 AM

செய்திகள் சில வரிகளில் - கெயின்ஸ் கோப்பை செஸ் போட்டி: இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

கெயின்ஸ் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியின் 5-வது சுற்றில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் உள்ளசெயிண்ட் லூயிஸ் நகரில்கெயின்ஸ் கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5-வதுசுற்றுப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, 83 நகர்த்தல்களுக்கு பிறகு ஜார்ஜியா நாட்டுவீராங்கனையான நானா சாக்னிசை வீழ்த்தினார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், இத்தொடரில் அவர்பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. இப்போட்டித் தொடரில் தற்போதைய தரவரிசையில் அவர் 2-வது இடத்தில் உள்ளார். சீன வீராங்கனை வென்ஜுன் ஜு மற்றும் ரஷ்ய வீராங்கனை அலெக்ஸாண்டிரா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அதே நேரம் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, ரஷ்ய வீராங்கனையான வாலெண்டினாவிடம் தோல்வியடைந்தார். அவர் இத்தொடரில் தற்போது 2.5 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் போபண்ணா-ஷபோவலோவ்

ரோட்டர்டாம்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ரோஹன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி தகுதி பெற்றுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாம் நகரில் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீரரான ரோஹன் போபண்ணா, கனடா வீரரான டெனிஸ் ஷபோவலோவுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார்.

நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் -மைக்கேல் வீனஸ் ஜோடியை எதிர்த்து அவர்கள் ஆடினர். மிகக் கடுமையான போட்டியைக் கொண்ட ஆட்டமாக இது இருந்தது. முதல் செட்டை போபண்ணா ஜோடி கைப்பற்றிய நிலையில் இரண்டாவது செட்டை ஆஸ்திரேலிய ஜோடி வென்றது.

இதைத்தொடர்ந்து 3-வது செட்டை கைப்பற்ற இரு ஜோடிகளும் கடுமையாக மோதின. இறுதியில் 10-8 என்ற புள்ளிக்கணக்கில் போபண்ணா ஜோடி இந்த செட்டைக் கைப்பற்றியது.

இதன்மூலம் 7-6, 6-7, 10-8 என்ற புள்ளிக்கணக்கில் போபண்ணா - ஷபோவலோவ் ஜோடி வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடக்கவுள்ள கால் இறுதிப் போட்டியில் ஜீன் ஜூலியன் ரோஜர் - ஹோரியா டெகாவ் ஜோடியை எதிர்த்து போபண்ணா-ஷபோவலோவ் ஜோடி ஆடவுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் காயம்

மெல்பர்ன்

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு சுமார் 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ள தால் இம்மாத இறுதியில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் சில ஆட்டங்களிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x