Published : 13 Feb 2020 10:43 AM
Last Updated : 13 Feb 2020 10:43 AM

மொழிபெயர்ப்பு: தரமான கல்வி வழங்குவதே உண்மையான தேசபக்தி

புதுடெல்லி

Providing quality education real patriotism: Victorious Sisodia takes swipe at BJP

New Delhi,

People of Delhi have explained the "true" meaning of nationalism through their mandate, AAP's Manish Sisodia said after his victory in the assembly poll, as he took a jibe at the BJP whose campaign revolved around "nationalism" and other related issues.

"Being in government and providing quality education is real patriotism," the outgoing deputy chief minister, and one of AAP's prominent faces, tweeted after defeating his BJP rival from the Patparganj seat. Sisodia, who won the seat for a third term, alleged the BJP indulged in the "politics of hate, but people refused to be divided".

"I am happy to have won the Patparganj seat again. The BJP indulged in politics of hate. But I thank the people of Patparganj. Today, Delhi's people have chosen a government which works for them. They have explained the true meaning of nationalism through their mandate," he told reporters.

He later took to Twitter to explain what patriotism meant for him. "Heartiest thanks Delhi for respecting five years of work, for respecting education. Being in government and providing quality education is real patriotism".

Sisodia, who was the Deputy Chief Minister and led the outgoing AAP government's education reforms agenda, defeated BJP's Ravinder Singh Negi by a margin of over 3,500 votes. In 2013, Sisodia had won by a margin of 11,000 votes and in 2015 by over 28,000.

- PTI

தரமான கல்வி வழங்குவதே உண்மையான தேசபக்தி

“டெல்லி மக்கள் தங்களுடைய வாக்குகள் வழியாக உண்மையான தேசபக்திக்கான பொருளை விளக்கி விட்டார்கள்” என்று டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அசுர வெற்றி கண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்து இருக்கிறார். தேசபக்தியை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவை கேலி செய்யும் விதமாக இதனை அவர் தெரிவித்தார்.

டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் மூன்றாவது முறையாக வென்றதை அடுத்து,“அரசாங்கத்தில் இருந்து கொண்டு தரமான கல்வியை வழங்குவதே உண்மையான தேசபக்தி” என்று மணீஷ் சிசோடி ட்விட்டரில் பதி விட்டு இருந்தார்.

மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பதும் துணை முதல்வராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீண்டும் பட்பர்கஞ்ச் தொகுதியை வென்றதில் மகிழ்ச்சி. பட்பர்கஞ்ச் மக்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

பாஜக வெறுப்பு அரசியலில் ஈடுபட்டது. அதையும் மீறி தங்களுக்காக செயல்படும் அரசை டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். தேசபக்திக்கான உண்மையான அர்த்தத்தை தங்களுடைய வாக்குகள் மூலம் அவர்கள் விளக்கி இருக்கிறார்கள்” என்று சிசோடியா பேசினார்.

டிவிட்டரில் தேசபக்தி குறித்து, “எங்களின் ஐந்து ஆண்டுகள் உழைப்புக்கும், கல்வி குறித்த செயல்பாட்டுக்கும் உரிய மதிப்பளித்த டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அரசாட்சி செய்து கொண்டு தரமான கல்வி அளிப்பதே உண்மையான தேசபக்தி” என்று அவர் பதிவிட்டார். டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி அரசின் துணை முதல்வராகவும் கல்வி அமைச்சராகவும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டவர்தாம் மணீஷ் சிசோடியா.

இவர் 3500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் சேர்ந்த ரவிந்தர்சிங் நெகியை தற்போது வென்றிருக்கிறார். முன்னதாக 2015-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதற்கும் முன்னதாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x