Published : 13 Feb 2020 08:41 AM
Last Updated : 13 Feb 2020 08:41 AM

சிவில் சர்வீஸ் பதவிக்குமே 31-ல் முதல்நிலை தேர்வு: மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 31-ல் நடைபெற உள்ளது. இதற்கு மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டு 796 சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 31-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. விருப்பமுள்ள பட்டதாரிகள் https://upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x