Published : 13 Feb 2020 08:31 AM
Last Updated : 13 Feb 2020 08:31 AM

செய்திகள் சில வரிகளில் - கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள்: அமைச்சர் கட்கரி உறுதி

கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சிறுதொழில்கள், கதர் உற்பத்தி போன்றவற்றில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதுதான் இலக்கு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்கரி கூறுகையில், “நமது கவனம் கிராமப்புற தொழிற்சாலைகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வேளாண் துறை சார்ந்த தேன் எடுத்தல், மண் பாண்டங்கள் செய்தல், மீன் பிடித்தல், உயிரி- எரிபொருள் உற்பத்தி போன்ற பணிகளை உருவாக்குவதில் உள்ளது.

அவர்களுக்கு சாதகமான கொள்கைகள் மூலமாக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதில் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு பெரியளவில் நடந்து வருகிறது. இதனால் தேனுக்கு பெரும் தேவை ஏற்படக் கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

- பிடிஐ

உலகிலேயே அதிக வயதுடைய முதியவர் கின்னஸ் சாதனை

டோக்கியோ

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் உலகிலேயே அதிக வயது கொண்ட நபர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 1907-ம் ஆண்டில் வடக்கு ஜப்பானில் உள்ள நிகாடாவில் பிறந்தவர் சிதெட்சு வதனபே.

வேளாண் பள்ளியில் பட்டம் பெற்ற இவர், தைவானில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தார். தைவானில் 18 ஆண்டுகள் வாழ்ந்த அவர் மிட்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளன. 112 ஆண்டு 344 நாட்கள் வயதான அவருக்கு உலகின் மிக அதிக வயதுடையவர் என்ற கின்னஸ் விருது நேற்று வழங்கப்பட்டது.

உங்களின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்று சிதெட்சுவிடம் கேட்டால், “ எதற்கும் கோபப்படாதீர்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்” என்றார் சிரித்தப்படியே. உலகின் அதிக வயதுடைய பெண்மணியும் ஜப்பானியரான கேன் தனகா உள்ளார். அவருக்கு 117 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x