Published : 13 Feb 2020 08:16 AM
Last Updated : 13 Feb 2020 08:16 AM

உலகிலேயே முதல் முறையாக மொழிகளுக்கான அருங்காட்சியகம்: அமெரிக்காவில் உருவாகி வருகிறது

புதுடெல்லி

உலகிலேயே முதல் முறையாக மொழிகளுக்கான அருங்காட்சியகம், ‘பிளானெட் வேர்டு’ என்ற பெயரில் அமெரிக்காவில் உருவாகி வருகிறது. இந்த அருங்காட்சியகம் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் வாஷிங்டன் நகரில் உருவாக்கப்படுகிறது. இதில்சிறப்பு என்னவென்றால் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் வயர்லெஸ் ஒலிபரப்பியை முதன் முதலில் கண்டுபிடித்த அதே ஃபிராங்க்ளின் பள்ளி வளாகத்தில் தொடங்கப்படுகிறது.

இங்கு மானுடவியல் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் இருந்தால் என்ன? இங்கு காட்சி கலைகளின் அருங்காட்சியகங்களே அதிமாக இருக்கும் நிலையில் சொற்களுக்கான அருங்காட்சியகம் உலகில் எங்குமே இல்லை.

இது சாத்தியம் இல்லை என்று தோன்றலாம். ஆனால் வாஷிங்டனில் முதன்முறையாக உலகில் இருக்கும் மொழிகளின் சொற்களை காட்சிப்படுத்தும் வகையில் அனைத்து மொழிகளின் சொற்களையும் வைத்து பிளானெட் வேர்டு உருவாக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தின் மூலம் மக்களால் உலகில் உள்ள பல்வேறு மொழிகளின் வரலாறு பற்றி அதிகளவில் புரிந்துகொள்ள முடியும். இதனால் பல்வேறு வகையாக மக்கள் இனங்களையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஒரே இடத்தில் புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

சுமார் 51,000 சதுர அடி கொண்ட மொழி அருங்காட்சியகத்தில், 10 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இது பார்வையாளர்களுக்கு மொழி குறித்து கேள்விகள், சந்தேகங்களை கேட்பதற்கும், உரையாடுவதற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை இலவசமாகப் பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x