Published : 12 Feb 2020 08:42 AM
Last Updated : 12 Feb 2020 08:42 AM

மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுவது எப்போது?

திருப்பூர் அருகே பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

நாச்சிபாளையம், கண்டியன் கோயில், தொங்குட்டிபாளையம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 30 குக்கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், விவசாயக் கூலிகள், திருப்பூர் சுற்று வட்டார பனியன் நிறுவனதொழிலாளிகளின் குழந்தைகள்தான். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு நிறைவு பெற சிலமாதங்களே உள்ள நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை இலவச மிதிவண்டி கிடைக்கவில்லை என்கின்றனர், மாணவர்கள்.

இதேபோல் 2017- 18-ம் ஆண்டுகல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர் முன்னாள் மாணவர்கள்.

பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தியிடம் கேட்டபோது, ‘மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.192 பேர் விலையில்லா மிதிவண்டிபெறுவதற்கான தகுதி உடையவர்கள். தற்போது மிதிவண்டிக்கான உதிரிபாகங்கள் பொருத்தும் பணிநடைபெற்று வருகிறது.

அந்த பணிகள் முடிவடைந்ததும் மிதிவண்டிகள் வழங்கப்படும். இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். மடிக்கணினி வந்ததும் மாணவர்களை வரவழைத்து வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x