Published : 11 Feb 2020 09:30 AM
Last Updated : 11 Feb 2020 09:30 AM

தஞ்சாவூர், தாராசுரத்துக்கு ஊனையூர் அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் கலை, அழகியல், புதுமைகள் என்ற தமிழ்ப் பாடப் பொருண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டுபிப்.9-ம் தேதி களப்பயணம் மேற்கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் சை.சற்குணன் தலைமையில் 60 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த களப்பயணத்தில் பங்கேற்றனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘பத்மனாபா’ கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிலையம், தாராசுரம் ஆதி கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிலையம் ஆகியவற்றுக்குச் சென்றமாணவ, மாணவிகள் செப்புச் சிலைகளைத் தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தனர்.

தாராசுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் சோழர் காலகோயில்களில் கற்சிலைகளின் நுட்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிற்பங்கள், கோயில் கட்டுமானங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

தாராசுரம் கோயிலில் அமைந்துள்ளஏழு ஸ்வரங்கள் படிகள், கல் தேர்ச் சக்கரம் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு வியப்படைந்தனர்.

தஞ்சாவூர் கோயிலில் உள்ள கல் சிற்பங்களில், சிற்பிகளின் திறமையால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் கண்டனர். களப் பயணத்தில் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் க.சுப்பிரமணியன், சமூக அறிவியல் ஆசிரியர் லா.ஜெயராணி, சத்துணவு அலுவலர் சிட்டம்மாள் ஆகியோர் உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x