Published : 11 Feb 2020 08:46 AM
Last Updated : 11 Feb 2020 08:46 AM

கோவையில் மாவட்ட அளவில் டென்னிகாய்ட் போட்டி: பீளமேடு கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி அணி முதலிடம்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் விளையாடிய பள்ளி மாணவிகள் அணிகள்.

கோவை

கோவை மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டியில், பீளமேடு கீதாஞ்சலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்துள்ளது.

கோவை மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான இடையிலான டென்னிகாய்ட் போட்டி, பீளமேட்டில் உள்ள கீதாஞ்சலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

லீக் சுற்று முதலாம் போட்டியில் ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, வெயின் வீணை மெட்ரிக் பள்ளி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இரண்டாம் போட்டியில் ஏபிசி மெட்ரிக் பள்ளி அணி, பாரதி மெட்ரிக் பள்ளி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.

3-வது போட்டியில் சரவணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி, மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அணியை 2-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. 4-வது போட்டியில் பிரசென்டேசன் கான்வென்ட் அணி, விமல்ஜோதி மெட்ரிக் பள்ளி அணியை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாக் அவுட் சுற்று முதலாவது போட்டியில் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'ஏ' அணி, பிரசென்டேசன் கான்வென்ட் அணியையும், கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'பி' அணி, பிரசென்டேசன் கான்வென்ட் பள்ளி அணியையும் 2-0 செட் கணக்கில் வென்றன.

3-வது போட்டியில் இக்விடாஸ் அணி, கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி ‘பி' அணியையும், 4-வது போட்டியில் இக்விடாஸ் அணி, பிரசென்டேசன் கான்வென்ட் அணியையும் 2-0 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தின. 5-வது போட்டியில் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'ஏ' அணி, கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'பி' அணியையும், 6-வது போட்டியில் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'ஏ' அணி, இக்விடாஸ் அணியையும் 2-0 செட் கணக்கில் தோற்கடித்தன.

இதன்மூலம் கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'ஏ' அணி முதலிடமும், கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளி 'பி' அணி இரண்டாமிடமும், இக்விடாஸ் அணி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x