Published : 11 Feb 2020 08:44 AM
Last Updated : 11 Feb 2020 08:44 AM

மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து நடத்திய ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1,100 பேர் பங்கேற்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், ஷெனாய்நகர், அண்ணாநகர் கோபுரம், கோயம்பேடு, பரங்கிமலை, விமான நிலையம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உட்பட15 மெட்ரோ ரயில் நிலையங்களில் பிப்ரவரி 2-ம் தேதி ஓவியப் போட்டிகளை நடத்தியது.

மெட்ரோ ரயில் அல்லது மெட்ரோ நிலையம் அல்லது மெய்நிகர் உண்மை என்ற தலைப்புகளில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1,100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

அவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த 20 ஓவியங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அந்த ஓவியங்கள் மெட்ரோ பயணிகள் வாக்களிப்பதற்காக 15 மெட்ரோ நிலையங்களிலும் வைக்கப்பட்டன.

பாராட்டுச் சான்றிதழ்

இந்நிலையில் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் (நிதி) ஆர்.முரளி பங்கேற்று, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x