Published : 10 Feb 2020 04:35 PM
Last Updated : 10 Feb 2020 04:35 PM

53 நொடிகளில் 35 மாநிலத் தலைநகரங்கள்: சரியாகச் சொல்லி சாதனை படைத்த 3 வயது மழலை!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத் தலைநகரங்களின் பெயரையும் சரியாகச் சொல்லி 3 வயது மழலை சாதனை படைத்துள்ளார்.

திருவேற்காடு அருகே நூம்பலைச் சேர்ந்தவர் டெனிதா. இவரின் மூன்று வயது ஆண் குழந்தை ஜெரேமியா. மழலை மாறாத தனது குரலில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களையும் மிகச் சரியாகச் சொல்கிறார்.

நினைவாற்றலில் அசத்தும் இந்த மழலை இதுவரை பள்ளிக்குச் சென்றதில்லை. வகுப்பறைகளையும் பார்த்ததில்லை. எனினும் 53 விநாடிகளில் அனைத்துத் தலைநகரங்களின் பெயரையும் சொல்லி அசத்துகிறார். மாநிலத்தின் பெயரை எப்படி மாற்றிக் கேட்டாலும் உரிய பதிலை ஜெரேமியா உடனடியாக வழங்குகிறார்.

தலைநகரங்கள் போலவே, எண் வரிசைகள், தேசிய கீதம் ஆகியவற்றையும் சொல்கிறார். சாப்பிடும்போது, விளையாடும்போது, ஓய்வு நேரத்தின்போது என விளையாட்டாகக் கற்பித்ததை, நினைவாற்றலால் மனதில் இருத்தி இருக்கிறார் மழலை ஜெரேமியா.

இதுகுறித்து அவரின் தாய் டெனிதா கூறும்போது, ''ஒருமுறை வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். 'நானும் சொல்றேன் மா!' என்று ஜெரேமியா விளையாட்டாகக் கேட்டார். தினசரி எந்த நோக்கமும் இல்லாமல் பயிற்சி அளித்தேன்.

முன்னதாக, மூன்றரை வயது பாப்பா 1.40 நிமிடங்களில் 35 மாநிலத் தலைநகரங்களையும் சொல்லி சாதனை படைத்திருந்தார். 3 வயது ஜெரேமியா 53 விநாடிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 'கலாம் விஷன் 2020' என்ற சாதனை நிகழ்ச்சியில் பங்குபெற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார். கின்னஸ் விருதுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x