Published : 10 Feb 2020 11:34 AM
Last Updated : 10 Feb 2020 11:34 AM

மொழிபெயர்ப்பு: இந்திய விஞ்ஞானி வடிவமைத்திருக்கும் புதிய மென்பொருள்

வாஷிங்டன்

Indian-led team develops software to reduce space taken by smartphone apps

Washington

A team led by an Indian-origin scientist has developed a new 'streaming' software that can reduce the space taken up by apps on a smartphone by at least 85 per cent.

The software "streams" data and code resources to an app from a cloud server when necessary, allowing the app to use only the space it needs on a phone at any given time.

"It's like how Netflix movies aren't actually stored on a computer. They are streamed to you as you are watching them," said Saurabh Bagchi, a professor at Purdue University in the US.

"Here the application components, like heavy video or graphics or code paths, are streaming instantly despite the errors and slowdowns that are possible on a cellular network," said Bagchi, an alumnus of Indian Institute of Technology (IIT), Kharagpur.

The study shows how the software, called App Streamer, cuts down storage requirements by at least 85 per cent for popular gaming apps on an Android.
The software, described in the journal Communications of the ACM, seamlessly shuffles data between an app and a cloud server without stalling the game, the researchers said.

Most study participants didn't notice any differences in their gaming experience while the app used App Streamer, they said. Bagchi noted that since App Streamer works for these storage-hungry gaming apps, it could work for other apps that usually take up far less space.

The software also allows the app itself to download faster to a phone, he said. AppStreamer could help phones better accommodate 5G connectivity, the researchers said.

5G is a high-speed wireless cellular network that would allow devices to download movies in seconds, and handle other data-heavy tasks much faster than the 4G networks currently available to most phones.

- PTI

இந்திய விஞ்ஞானி வடிவமைத்திருக்கும் புதிய மென்பொருள்

நம்முடைய அலைபேசியின் மெமரியில் பெரும்பகுதி இடத்தை செயலிகளே அக்கிரமித்துவிடுகின்றன. இதனை 85 சதவீதம் வரை தடுக்கக்கூடிய மென்பொருளை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்து இருக்கிறார்.

செயலி தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அதை க்ளிவுட் சர்வரில் இருந்து இணையம் வழியாகப் பயன்படுத்தும் வகையில் ‘ஆப்ஸ்ட்ரீமர்’ என்ற மென்பொருளை அவர் வடிவமைத்து இருக்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய விஞ்ஞானி சவுரப் பக்சி கூறுகையில், “கணினியில் சேமிக்காமலே நெட்ப்ளிக்ஸ் படங்களை கணினி திரையில் பார்க்கிறோம். நாம் பார்க்கும் நேரத்தில் மட்டுமே அவை நேரலை செய்யப்படுகின்றன.

அது மட்டுமின்றி நம்முடைய அலைபேசியில் நெட்வொர்க்கின் வேகம் குறைந்துவிட்டால்கூட பெரிய காணொலிகள், கிராபிக்ஸ்கள் அல்லது நிரல்கள் நேரலை செய்யப்படுகின்றன அல்லவா. அது போலத்தான் இதுவும்” என்றார். அமெரிக்காவில் உள்ள பர்தூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் விஞ்ஞானி சவுரப் பக்சி கோரக்ப்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்.

ஜர்னல் கம்யூனிகேஷன் ஆஃப் தி ஏசிஎம் ஆய்விதழில் ‘ஆப்ஸ்ட்ரீமர்’ மென் பொருள் குறித்த கட்டுரை வெளியாகி உள்ளது. செயலிக்கும் கிளவுட் சர்வருக்கும் இடையில் தகவல்களை பரிமாற இந்த மென்பொருள் உதவுகிறது. ‘ஆப்ஸ்ட்ரீமர்’ மென்பொருள் பதிவேற்றப்பட்ட அலை பேசியில் விளையாடி பார்த்தவர்களுக்கு வழக்கத்துக்கு மாறாக எந்த வித்தியாசமும் தெரியவில்லையாம்.

அதிக அளவில் மெமரியை கபளீகரம் செய்யும் விளையாட்டு செயலிகளிலேயே இந்த மென்பொருள் சிறப்பாக செயல்படுவதால் சாதாரண செயலிகளுக்கும் இது நன்றாக வேலை செய்யும் என்று விஞ்ஞானி சவுரப் பக்சி உறுதி அளித்திருக்கிறார்.

போனில் செயலியை துரிதமாகப் பதிவிறக்கவும் இந்த மென் பொருள் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். 5ஜி நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்த ஏதுவாக ‘ஆப்ஸ்ட்ரீமர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நொடியில் ஒரு முழுநீளத் திரைப்படத்தை பதிவிறக்கும் அளவுக்கு 5ஜி நெட்வொர்க் சக்தி வாய்ந்தது. தற்போது அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் 4ஜி
நெட்வொர்க்கை காட்டிலும் பெரிய தகவல்களை அதிவேகமாக பதிவிறக்க 5ஜியால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x