Published : 07 Feb 2020 11:42 AM
Last Updated : 07 Feb 2020 11:42 AM

மொழிபெயர்ப்பு: தமிழர்கள் வழக்கம் பற்றி புதிய ஆய்வு கையால் சாப்பிட்டால் ருசியே தனி!

நியூயார்க்

High self-control people may find food tastier if they eat directly with hands: Study

New York

In people who regularly control their diet, direct touch of food triggers an enhanced sensory response which makes food more desirable and appealing, according to a new study that may help retailers drive consumer behaviour.

The study, published in the Journal of Retailing, revealed that when high self-control individuals touch food directly with their hands, as opposed to using a utensil, they not only experienced it as tastier and more satisfying, but also ate more of it.

According to the researchers, including those from Stevens Institute of Technology in the US, the findings may not only offer a way to increase the appeal of food, but also offers retailers a way to make the eating experience more enjoyable for consumers sampling food.

In the first experiment part of the study, 45 undergraduate students visually inspected and evaluated a cube of Muenster cheese, holding it before eating, while the researchers asked them questions about their eating behaviour.

Half of the participants, the study noted, sampled a cheese cube with an appetizer pick on it, and the other half sampled it without a pick. Both the groups -- direct touch and indirect touch -- did not indicate any difference between the cheese before eating it, the researchers said.

However, they said, participants who reported a high degree of self-control when consuming food -- individuals who said they can resist tasty foods, and are conscious about what and how much they eat -- perceived the cheese as tastier and more appetizing after they ate it.

According to the researchers, in people who regularly control their food consumption, direct touch triggers an enhanced sensory response, making food more desirable and appealing.

The current study, Madzharov and her team said, is the first to report that direct touch of food may influence how people experience food.

- PTI

தமிழர்கள் வழக்கம் பற்றி புதிய ஆய்வு கையால் சாப்பிட்டால் ருசியே தனி!

கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள்கூட கையால் சாப்பிடும்போது சாப்பாட்டுப் பிரியராகமாறிவிடுவார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரண்டியை பயன்படுத்தாமல் கைகளால் எடுத்துச் சாப்பிடும்போது தொடு உணர்வு தூண்டப்பட்டு உணவின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும், சாப்பாடு சுவையாகத் தோன்றும், சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும், வழக்கத்தை விடவும் கூடுதலாக சாப்பிட தோன்றும் என்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

கைகளால் சாப்பிடும் பழக்கத்தை பிரபலப்படுத்துவதன் முலம் சாப்பிடும் அனுபவத்தை ரசிக்கத்தக்கதாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றலாம் என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவில் உள்ள ஸ்டீவ்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் முதல்கட்ட ஆய்வில் 45கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் கையில் ஒரு பாலாடைக்கட்டித் தரப்பட்டது. இந்த மாணவர்களில் பாதி பேர் உணவுப் பண்டத்தைகுத்தி எடுக்கும் குச்சியால் பாலாடைக் கட்டியை எடுத்துக்கொண்டனர். மீதி பேர் கையில் பாலாடைக் கட்டியை வைத்தபடி நின்றனர்.

அப்போது அவர்களுடைய உணவுப் பழக்கம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. பிறகு பாலாடைக் கட்டியைச் சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். அப்போது கையில் பாலாடைக் கட்டியைப் பிடித்திருந்தவர்கள் அது மிகவும் சுவையாக இருந்ததாக தெரிவித்தனர்.

ஆக, வழக்கமாக கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்கள்கூட நேரடியாக உணவு பண்டத்தைத் தொடும் போது தொடு உணர்வு தூண்டப்பட்டு சாப்பாட்டுப் பிரியர்களாக மாறுகிறார்கள் என்பதைகண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நேரடியாக உணவுப் பண்டத்தைத் தொட்டுச் சாப்பிடுவதன் மூலம் உணவுஉண்ணும் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது என்று தலைமை ஆராய்ச்சியாளர் மட்ஜரோவ் என்பவரும் அவருடைய குழுவினரும் தெரிவித்துள்ளனர்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x