Published : 07 Feb 2020 09:43 AM
Last Updated : 07 Feb 2020 09:43 AM

கோவையில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: ஆக்ரோஷமாக மோதிய மாணவிகள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆக்ரோஷமாக மோதும் மாணவிகள்.படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மாணவிகள் ஆக்ரோஷமாக மோதினர்.

கோவை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் பிரியா சதீஷ் பிரபு, கோவை மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் ஆர்.முத்துராஜூ ஆகியோர் கூட்டாக போட்டிகளை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து 81 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அதில் வெற்றி பெற்றவர்கள்விவரம்:

கட்டா போட்டி மாணவர் பிரிவில் கவியரசு முதலிடமும், சூர்யா இரண்டாமிடமும், மாணவிகள் பிரிவில் இஷாமுதலிடமும், ஸ்வேதா இரண்டாமிடமும் பெற்றனர்.

குழு கட்டா போட்டி மாணவர் பிரிவில் அரவிந்த் முதலிடத்தையும், அக் ஷய் இரண்டாமிடத்தையும், நரேன் நல்லசாமி மூன்றாமிடத்தையும், மாணவிகள் பிரிவில் கனிஷ்கா முதலிடத்தையும், ஸ்ருதி இரண்டாமிடத்தையும், தாருனிகா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கராத்தே சங்கப் பொருளாளர் கார்த்திகேயன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், உடற்கல்வி இயக்குநர் எஸ்.கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x