Published : 07 Feb 2020 08:14 AM
Last Updated : 07 Feb 2020 08:14 AM

10, 12-ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு: பெற்றோர், மாணவர்கள் புகார்

10, 12-ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மாண வர்கள், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழக அரசின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்ஆண்டுதோறும் வினா வங்கிபுத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. இவற்றை முழுமையாக படித்தால் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்களிடம் அதிக வரவேற்புள்ளது.

வழக்க மாக நவம்பர் மாதத்தில் வினா வங்கி வெளியாகிவிடும். ஆனால், புதிய பாடத்திட்டம் காரணமாக நடப்பு ஆண்டு வினா வங்கி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கு ஜனவரி இறுதியில் வினா வங்கி புத்தகங்கள் வெளியாகின. இந்த வினா வங்கி அனைவருக்கும் கிடைப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு பள்ளியில்விற்பனை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விற் பனை செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் பரவலாக தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

கூடுதல் பிரதிகள்

இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர் கூறும்போது, ‘‘கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள அனைத்து மையங்களிலும் 10-ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் காலியாகி விட்டதாக கூறுகின்றனர். பிளஸ் 2 வகுப்புக் கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது. கூடுதல் பிரதிகள் எப்போது வரும் என கேட்டாலும் உரிய பதில் இருப்பதில்லை.

இதற்காக தினமும் விற்பனைமையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒருமாதம்கூட முழுமையாக இல்லை. மாணவர்கள் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்கும்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இ-புத்தகங் களை இணையதளத்தில் வெளியிட்டாலும் பிரதி எடுத்து படிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x