Published : 06 Feb 2020 11:14 AM
Last Updated : 06 Feb 2020 11:14 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? ஒரு கேள்வி கேட்கட்டுமா?

​ஜி.எஸ்.எஸ்.

வெளியூர் செல்லும் நகரப் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறான் திருவரசு. அப்போது அங்கு வந்து சேருகிறான் பாலாஜி. அதற்கு முன் சந்தித்திராத அவர்கள் இருவருக்கு மிடையே நடைபெறும் உரையாடல் இது.

Balaji – Where you want to go?
Tiruvarasu – I want to go to Singapore.
Balaji – No. No. Where are you going now?
Tiruvarasu – To my uncle’s house.
Balaji – Why?
Tiruvarasu – Because I like my uncle. Do you have any object?
Balaji – No. No. Where is your uncle’s house?
Tiruvarsu - It is where I am going.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள். மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது.

என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். திருவரசு சரியான கிண்டல் செய்யும் நபராகத் தோற்ற மளிக்கிறான். பாலாஜி அப்பாவித்தனமாக, ஆனால், தவறாகக் கேட்கும் கேள்விகளின் அர்த்ததைப் புரிந்து கொண்டும் கூட கிண்டலாக பதிலளிக்கிறான்.

அவை என்ன என் பதைப் பார்ப்போம். வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் இருவர் பேசிக் கொள்வது இயல்பானது தான். தான் செல்லும் ஊருக்கே அருகில் காத்திருப்பவனும் (திருவரசு) செல்லப் போகிறானா? தாங்கள் இருவரும் ஒரே பேருந்துக்காக காத்திருக்கிறோமா என்பதையெல்லாம் அறிந்து கொள்ள பாலாஜி ஆசைப்படுகிறான்.

ஆனால், அறிமுகமாகாத ஒருவரிடம் உரிமையுடன் கேள்வி கேட்கக் கூடாது. “I am Balaji. May I ask you a question?” என்று கூறிய பிறகுதான் where you want to go? என்ற கேள்வியை பாலாஜி கேட்டிருக்க வேண்டும். (அது கூட where do you want to go என்பதாக இருக்க வேண்டும்). அப்போது கூட எந்தப் பேருந்துக்கு காத்திருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டுமே தவிர, நேரடியாகக் கேட்கக் கூடாது.

Where do you want to go? என்பதற்குப் பதிலாக “May I know to which place are you proceeding?” என்று அவன் கேட்டிருக்கலாம். I want to go to Singapore என்று கிண்டலாகக் கூறும் திருவரசு இரண்டாவது முறையும் தான் போகும் இடத்தைக் குறிப்பிடாமல் I want to go to my uncle’s house என்கிறான்! Do you have any object என்றால் உன்னிடம் ஏதாவது பொருள் இருக்கிறதா என்ற அர்த்தம் வருகிறது. உனக்கு ஏதாவது மறுப்பு உண்டா என்பதைக் குறிக்க Do you have any objection என்று கேட்க வேண்டும்.

கடைசிவரை தான் எந்த ஊருக்குச் செல்லக் காத்திருக்கிறான் என்பதைத் திருவரசு வெளிப்படுத்தவே இல்லை. ஆக ஆங்கிலத்தில் சொற்களை தவறாகப் பயன்படுத்தினால் எதிராளி அதைக் கொண்டு கேலி செய்யலாம் என்பது தெரிகிறது. அதே நேரம் யாராவது ஆங்கில உரையாடலில் தவறு செய்தால் நீங்கள் கேலி செய்யக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x