Published : 06 Feb 2020 11:01 am

Updated : 06 Feb 2020 11:01 am

 

Published : 06 Feb 2020 11:01 AM
Last Updated : 06 Feb 2020 11:01 AM

மொழிபெயர்ப்பு: பெண்கள் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படுவதற்கும் குழந்தை இறப்புக்கும் தொடர்புள்ளது! 

high-global-stillbirth-rates-linked-to-gender-inequality

டொரன்டோ

High global stillbirth rates linked to gender inequality: Study

Toronto,


Pregnant women who are oor, and have lower access to education and employment are more likely to experience a child's death at delivery, according to a study which mapped global patterns of stillbirth rates.

The study, published in the journal Scientific Reports, noted that 2.6 million stillbirths happen worldwide annually, a number that has remained high despite reduction in neonatal, and under-five mortality rates.

"Our research offers a better understanding of where stillbirth rates are higher, and what the social causes underlying stillbirths are, not just taking into account the medical factors as most studies do," said Nazeem Muhajarine, from the University of Saskatchewan (USask) in Canada.

According to the computer model developed by the researchers, stillbirths are more likely in countries where gender inequality is high -- where women face financial hurdles, and have less access to education and employment opportunities compared to men.

Assessing data from 194 countries, the model showed which social causes in addition to gender inequality have a potential link to stillbirth rates worldwide.

The researchers found that stillbirth rates are more likely in countries where pregnant women have higher rates of iron deficiency, limited pre-birth healthcare, and lack of access to skilled health professionals like nurses, midwives or doctors.

The study also noted "hot spots" of highest stillbirth rates -- a cluster of 37 countries in Africa and Southern Asia.To lower stillbirth rates the researchers said, requires improving women's access to education and improving mothers' nutrition compared to current worldwide rates.

- PTI

பெண்கள் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படுவதற்கும் குழந்தை இறப்புக்கும் தொடர்புள்ளது!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் ஏழ்மையில் வாடும் கர்ப்பிணிகள் பிரசவிக்கும் குழந்தைகள் பிறப்பிலேயே இறக்க அதிக வாய்பிருப்தாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் இறந்து பிறத்தல் (stillbirth) விகிதம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்’ ஆய்விதழில் இதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு வெகுவாக குறைக்கப்பட்டு இருந்தாலும் ஆண்டுதோறும் 26 லட்சம் குழந்தைகள் இறந்த நிலையில் பிறக்கின்றன.

கனடாவில் உள்ள சஸ்கத்செவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நஜீம் முகஜரைன் இது குறித்துப் பேசுகையில், “வழக்கமான ஆய்வுகளைப் போல் வெறுமனே மருத்துவ காரணங்களை மட்டும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கெல்லாம் பிறசவத்தின் போது இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது மற்றும் அதற்கான சமூக காரணிகள் யாவை என்பது குறித்த தெளிவான புரிதலுக்கு எங்களுடைய ஆராய்ச்சி உதவும்” என்றார்.

பெண்கள் எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் பிரசவத்தின்போது இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் நிதி நெருக்கடி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுதல் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

194 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், பெண் அடிமைத்தனத்தை தவிரவும் வேறெந்த காரணங்களால் இறந்து பிறத்தல்விகிதம் அதிகரிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. இரும்பு சத்து குறைபாடு, கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சோதனைகளில் போதாமை, செவிலியர், மருத்துவச்சி அல்லது மருத்துவர்களை அணுக முடியாத சூழ்நிலை உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்களாம்.

37 ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளில் இறந்து பிறக்கும் குழந்தைகளின் விகிதம் உச்சபட்சமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு தீர்வு காணப் பெண்களுக்குக் கல்வி கிடைப்பதற்கான சுமுக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமின்றி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும்.

-பிடிஐ

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைமொழிபெயர்ப்புபெண்கள்குழந்தை இறப்புஏற்றத்தாழ்வுStillbirthவேலைவாய்ப்புகல்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author