Published : 05 Feb 2020 07:35 AM
Last Updated : 05 Feb 2020 07:35 AM

செய்திகள் சில வரிகளில்: பள்ளிகளில் புத்தகப்பை இல்லாத சனிக்கிழமைகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்கப்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளியின் ஆசிரியர் சங்கீதா தலேகான்கர் கூறுகையில், “ சனிக்கிழமை பள்ளிக்கு வரும்போது புத்தகப்பை கொண்டு வரவேண்டாம் என்று கடந்த வாரம் அறிவித்தோம். இதற்கு பிறகு வகுப்பறையில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சனிக்கிழமையில் படிப்புக்கு பதிலாக கைவினைப் பொருட்கள், விளையாட்டு, ஓவியம் வரைதல் போன்றவற்றை கற்றுக் கொடுக்கிறோம்.

இது அவர்களுக்கு மன அழுத்தமில்லாமல் இருக்க உதவுகிறது. இதனால், பிற நாட்களில் படிப்பின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்” என்றார்.

உலக சாதனைக்காக 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியம்

சென்னை

தமிழக சுற்றுலா துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள எஸ்ஐவிஇடி கல்லூரியில் தமிழக சுற்றுலா துறை சார்பில் 10 ஆயிரம் பரத நாட்டியக் கலைஞர்களைக் கொண்டு, ‘சதிர் 10,000’ என்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வரும் 8-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், நடனப் பள்ளிகளை சேர்ந்த பரத நாட்டிய மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சுற்றுலா துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் http://sadhanaisigaram.com/lpd/register என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 99947 97110 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x