Published : 04 Feb 2020 10:18 AM
Last Updated : 04 Feb 2020 10:18 AM

மொழிபெயர்ப்பு: தேசிய காவல் பல்கலைக்கழகத்துக்கு கிரண் பேடி வரவேற்பு

Bedi hails proposal to set up National police varsity in Pondy

Puducherry,

Puducherry Lt Governor Kiran Bedi on Sunday hailed the proposal to set up a National Police University in the union territory.Finance Minister Nirmala Sitharaman had made the announcement in the budget presented on Saturday.

"The long-awaited national police university is now part of the Budget. This will go a long way in meeting the research needs of vital security concerns and will also fill the existing vacuum for a single platform for academics, thinkers and scholars in policing," Bedi said in a WhatsApp message to mediapersons here.

She said such an institution was always in the pipeline and was much needed, but earlier the focus was different."Moneys and human resources were found wanting," the former IPS officer said, adding she was a "witness to these during my service as DGP of the Bureau of Police Research and Development. Announcements were never seen to match available resources and they were mere announcements."

Bedi thanked the Centre and said "it is interesting to see the current government gifting the police service a Police Memorial inaugurated by the Prime Minister (in 2018) to now a National Police University (a project of the Union Home Ministry)."

PTI

தேசிய காவல் பல்கலைக்கழகத்துக்கு கிரண் பேடி வரவேற்பு

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய காவல் பல்கலைக்கழகம் விரைவில் நிறுவப்படும் என்ற அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டதை முழுமனதுடன் வரவேற்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் சனிக்கிழமை அன்று 2019-20-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தன்னுடைய கருத்தை கிரண் பேடி பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டவை:

நெடு நாட்களாக எதிர்பார்த்திருந்த தேசிய காவல் பல்கலைக்கழகம் இப்போது பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ளது. பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சித் தேவைகளை இது பூர்த்தி செய்யும். மற்றும் காவல்துறையில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் இல்லாத பற்றாக்குறையை இது தீர்த்துவைக்கும்.

இத்தகைய கல்வி நிலையத்துக்கான தேவை நெடுங்காலமாக இருந்து வந்தது. ஆனால், அப்போது அதை உருவாக்குவதற்கான சூழல் அமையவில்லை. நிதியும் மனித வளமும் போதாமல் இருந்தது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டிஜிபியாக பணியாற்றிய காலத்தில் இத்தகைய நிலையை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அப்போது முன்வைக்கப்பட்ட பல அறிவிப்புகள் நிதி மற்றும் மனித வள பற்றாக்குறை காரணமாக வெறும் அறிவிப்பாக மட்டுமே நின்று போய்விட்டன.

தற்போதுள்ள அரசு காவல் துறைக்கு உரிய மரியாதை அளிப்பதாகத் தோன்றுகின்றது. 2018-ம் ஆண்டில் பிரதமர் காவல் நினைவகத்தை திறந்து வைத்தார். தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய காவல் பல்கலைக்கழகத்தை நிறுவ உள்ளது. இவ்வாறு கிரண் பேடி தன்னுடைய வாட்ஸ் அப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x