Published : 04 Feb 2020 10:04 AM
Last Updated : 04 Feb 2020 10:04 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? - கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?

ஜி.எஸ்.எஸ்.

மதிய உணவு வேளை. ராஜ், பிரேம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Raj – Can you give me water to drink?
Prem – Yes. Take this. Have you not brought water?
Raj – No. Water at our house is dirty.
Prem – Are you buying water from a road shop?
Raj – We filter water and drink.
Prem – But you should boil and then filter.
Raj – In today we will do it.
Prem – Nice to know.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

Can you give water என்று கேட்கிறான் ராஜ். Can you give me some water என்று அவன் கேட்டிருக்க வேண்டும். தண்ணீரை road shop-ல் வாங்குகிறாயா என்று கேட்கிறான் பிரேம். Roadside shop என்று அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

But you should boil and then filter என்கிறான் பிரேம். முதலில் கொதிக்க விட்டு பிறகு வடிகட்ட வேண்டும் என்று இருந்தால் சரியாக இருக்கும். எனவே you should first boil and then filter என்று இருக்க வேண்டும். தவிர எதைக் கொதிக்க வைக்க வேண்டும் என்பதும் அந்த வாக்கியத்தில் தேவை. You should first boil the water and then filter it என்பதாக அந்த வாக்கியம் இருக்க வேண்டும்.

இன்றிலிருந்து அதைக் கடைப்பிடிக்கிறோம் என்று கூற நினைத்து in today we will do it என்கிறான் ராஜ். அந்த வாக்கியம் from today என்று தொடங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருள் வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x