Published : 03 Feb 2020 11:06 AM
Last Updated : 03 Feb 2020 11:06 AM

மொழிபெயர்ப்பு: படிப்பில் கவனம் செலுத்த கல்லூரியில் அலைபேசிக்குத் தடை

College bans mobile phones to boost student performance

Aurangabad,

focus on education, a women's college in Maharashtra's Aurangabad city has banned the use of mobile phones inside it campus.The move comes at a time when mobile phones have become an indelible part of everyday living, where youngsters are glued to social media.

Speaking to PTI, Principal of Dr Rafiq Zakaria Women's College, Dr Maqdoom Farooqui said, "We were searching for measures to enhance the process of learning and we found that students could concentrate better when they are not allowed to carry their cellphones to classrooms."

With more than 3,000 students, the women's college offers undergraduate and postgraduate courses. The ban, which was imposed 15 days ago, has not only helped students focus better in classrooms, but also improved their interaction with their peers, Dr Farooqui said.

Although students are not allowed to carry their own phones on campus, a couple of handsets are kept in the reading room for emergencies, he added.
"Initially, the decision was taken as a punishment for overuse of cellphones, but now students and staff are cooperating in the effort to enhance the learning and teaching process," the principal claimed.

A student on the condition of anonymity said, "We are getting to know the world around us, as now have plenty of time to read newspapers and magazines in the library."

- PTI

படிப்பில் கவனம் செலுத்த கல்லூரியில் அலைபேசிக்குத் தடை

மகாராஷ்டிராவில் அவுரங்கபாத்தில் உள்ள மகளிர் கல்லூரி அலைபேசியை பயன்படுத்த, மாணவிகளுக்குத் தடைவிதித்துள்ளது. மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரி வளாகத்துக்குள் அலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக சமூக ஊடகங்களை இன்றைய இளைஞர்கள் பார்க்கிறார்கள். அப்படியிருக்க இந்த நடவடிக்கையை கல்லூரி எடுத்திருக்கிறது. இது குறித்து டாக்டர் ஜகாரியா பெண்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மக்தூம் ஃபரூக்கி பிடிஐ செய்தியாளரிடம் பேசுகையில், “கற்றல் திறனை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று
தேடிக்கொண்டிருக்கிறோம். செல்ஃபோனை வகுப்பறைக்குள் கொண்டுவர கூடாது என்று சொல்வதன் மூலம் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த உதவ முடியும் என்று கண்டு பிடித்தோம். 15 நாட்களுக்கு முன்பு இந்த தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு மாணவர்கள் வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டுமின்றி சக மாணவர்களுடனும் முன்பைக்காட்டிலும் சிறப்பாக உரையாடுகிறார்கள். மாணவர்கள் தங்களுடைய அலைபேசியைக் கல்லூரிக்குள் கொண்டு வரக் கூடாது என்றாலும் அவசர தேவைக்கு கல்லூரியின் வாசிப்பு அறையில் இரண்டு அலை பேசிகளை வைத்திருக்கிறோம்.

அதீத செல்போன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக மட்டுமே இந்த முடிவு தொடக்கத்தில் பார்க்கப்பட்டது. பிறகு கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் நடவடிக்கை என்று புரிந்த பிறகு மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்” என்றார்.

3000-த்துக்கு அதிகமான மாணவிகள் படிக்கும் இந்த கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெயர் வெளியிட விரும்பாத மாணவி ஒருவர் கல்லூரியின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘எங்களைச் சுற்றி உள்ள உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம். நூலகத்தில் உள்ள நாளிதழ்களையும் பத்திரிக்கைகளையும் வாசிக்க இப்போது நிறைய நேரம் கிடைக்கிறது” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x