Published : 03 Feb 2020 09:22 AM
Last Updated : 03 Feb 2020 09:22 AM

சிறுநீரகத்தைப் பாதுகாப்போம்

அன்பு மாணவர்களே...

மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். மனிதனுக்கு இயற்கையாகவே 2 சிறுநீரகங்கள் உள்ளன. ரத்தத்தில் இருந்து யூரியா போன்ற உப்புகளை பிரித்து ரத்தத்தை சுத்திகரிப்பதே இவற்றின் பிரதான வேலை. அதுபோக, நாம் தினமும்குடிக்கும் தண்ணீரில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து உப்பு கரைசலாக வெளியேற்றும்.

நமது உடலில் பல முக்கிய வேலைகளை செய்யும் சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டாமா? ஆனால், அதைநாம் பல வழிகளில் துன்புறுத்துகிறோம் என்றே சொல்லலாம்.சிறுநீரக சம்பந்தமான நோய்கள் எந்த வயதில் வேண்டுமாலும் வரலாம்.

5-16 வயது குழந்தைகளுக்கு சீறுநீரை முறையாக வெளியேற்றாமல் சிறுநீரக பையில் தேங்க செய்வதாலேயே வருகிறது. விளையாட்டு மனநிலையாலும், சோம்பேறித்தனத்தாலும் பல சிறுவர்கள் / சிறுமிகள், சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைக்கிறார்கள். பள்ளி வகுப்புறையில் இருக்கும்போது சிறுநீர் வந்தால், ஆசிரியரிடம் கேட்க கூச்சப்பட்டும், சக மாணவ, மாணவிகள் கேலி செய்வார்கள் என்று நினைத்தும் சிறுநீரை அடக்குகிறார்கள்.

சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டியது கட்டாயம். அதில் கேலி செய்ய எந்த பொருளுமில்லை. அதேபோல், வகுப்பறையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால், மறுக்காமல் ஆசிரியர்கள் அனுமதி வழங்க வேண்டும்.

சிறுநீரை அடக்கி வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளால், உலகளவில் ஆண்டுதோறும் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சிறுநீர் கழிக்க சோம்பல் படாதீர்கள். அந்த ஒரு நிமிடத்தில் நீங்கள் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள். எனவே, தேவையான தண்ணீரை அன்றாடும் பருகி, சரியான நேரத்தில் சிறுநீரை கழித்து சிறுநீரகத்தை பாதுகாப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x