Published : 03 Feb 2020 08:35 AM
Last Updated : 03 Feb 2020 08:35 AM

அறிவுத் திருவிழா விநாடி-வினா போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி முதலிடம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவுத் திருவிழா-விநாடி, வினா போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக். பள்ளி முதல் பரிசு பெற்றது.

‘இந்து தமிழ் திசை’ மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லூரி இணைந்து திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தில் உள்ள ஸ்ரீவாசவி மெட்ரிக். பள்ளியில் அறிவித் திருவிழா-விநாடி, வினா போட்டிகளை நடத்தின.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் இருந்து 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் கலந்து கொண்டனர்.

விநாடி-வினா போட்டிகளை குவிஸ் மாஸ்டர் ரங்கராஜ் நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக வேலம்மாள் பொறியியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் எஸ்.ஜான் எதில்டன், உதவி பேராசிரியர் சக்திவேல், வாசவி பள்ளி முதல்வர் கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தனர்.சரியாகப் பதில் அளித்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற 6 அணிகளுக்கு வீடியோ படங்களைக் காண்பித்து கேள்விகள்கேட்கப்பட்டன. பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் எஸ்.எம்.பி.எம். பள்ளிமாணவர்கள் எஸ்.மனோஜ்பிரகாஷ், டி.ஆர்.கவுசிக்ராஜா முதல் பரிசையும், அதே பள்ளியைச் சேர்ந்த என்.ஹரிநாக ராஜன்,ஜெ.சுந்தர் ஆகியோர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x