Published : 30 Jan 2020 07:54 AM
Last Updated : 30 Jan 2020 07:54 AM

"பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்" - துணிப்பைகளுடன் உறுதிமொழியேற்ற அரசு பள்ளி மாணவர்கள்

"பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்" என்று திருச்சி அருகேயுள்ள திண்ணக்கோணம் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி மாணவர்கள் துணிப் பைகளுடன் உறுதிமொழியேற்றனர்.

திருச்சி பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் நெகிழியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திண்ணக்கோணம் ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு பள்ளியின் தலைமையாசிரியர் குமாரலிங்கம் தலைமை வகித்தார். திண்ணக்கோணம் ஊராட்சிமன்றத் தலைவர் செ.ரஞ்சிதா கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

பசுமை சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் யோகநாதன், சந்திரசேகர் பாலாஜி ஆகியோர் நெகிழியின்(பிளாஸ்டிக்கின்) தீமைகள் குறித்தும்,துணிப் பைகளை பயன்படுத்துவதன்அவசியம் குறித்தும் மாணவர்களுக்குவிளக்கினர்.

"நோய் நொடியில்லாதமனித குலம் வாழ, அதிக அளவில்மரங்கள் வளர்த்து இயற்கையைப்பாதுகாப்போம், நெகிழி பயன்பாட்டைதவிர்ப்போம், வீடுகள் தோறும் மூலிகைகள் வளர்ப்போம், குப்பைகளை தரம்பிரித்து அளிப்போம், கழிப்பறையைபயன்படுத்துவோம்" என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் இலவசமாக துணிப்பைகள் வழங்கப்பட்டன. நிறைவாக, சோழராஜா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x