Published : 30 Jan 2020 07:22 AM
Last Updated : 30 Jan 2020 07:22 AM

செங்கல்பட்டு அருகே தொடங்கப்பட்ட மாணவர் காவல் படையினருக்கு பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் மற்றும் மணமை ஆகிய அரசு மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்துள்ளனர். மாணவர் காவல் படையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்சிகள் மற்றும் காவல் நிலையத்தில் போலீஸார் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்குவதற்காக, மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

காவல் நிலையத்தில், போலீஸாரின் சட்டம்-ஒழுங்கு பணிகள் மற்றும் போக்குவரத்து போலீஸாரின் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மாணவிகளுக்கு அச்சத்தைநீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸார் பயன்படுத்தும்வாக்கி டாக்கியின் செயல்பாடு, துப்பாக்கி, பிஸ்டல் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து உதவி ஆய்வாளர் குப்புசாமி விளக்கம் அளித்தார்.

பின்னர், காவல் நிலையத்தில் உள்ள சிறைகளை பார்வையிட்டனர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனைகள் வழங்குவதற்காக வாரந்தோறும் பள்ளியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படஉள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாணவர் காவல்படை ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் மற்றும்போலீஸார் என பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x