Published : 29 Jan 2020 09:54 AM
Last Updated : 29 Jan 2020 09:54 AM

மொழிபெயர்ப்பு: ‘கேலோ’ விளையாட்டில் 170 இந்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4000 விளையாட்டு வீரர்கள்

More than 4000 athletes from 176 institutes to take part in inaugural Khelo India University Games

Bhubaneswar,

The inaugural Khelo India University Games, which will be held here from February 22 to March 1, will see more than 4000 athletes from 176 institutes vying for top honours in 17 sports.

Some of the top universities of the country, including University of Madras, Kerala University, Jamia Millia Islamia University, will send their athletes for the Games.

"With 176 Universities from across India registering to participate in the first edition of Khelo India University Games, we are confident this will create a new revolution in sports at the varsity level where youth of U-25 will get a great platform to showcase their talent in 17 different disciplines," Sports Authority of India Director General Sandip Pradhan said.

"The vision behind hosting this multi-discipline sporting extravaganza is to create a robust university games and identify talent who can be trained for the Olympics. Across the world, university games have formed the basis for identification and nurturing of Olympic talent," he said.

The athletes will compete in 17 disciplines namely archery, athletics, boxing, fencing, judo, swimming, weightlifting, wrestling, badminton, basketball, football, hockey, table tennis, tennis, volleyball, rugby and kabaddi.

- PTI

‘கேலோ’ விளையாட்டில் 170 இந்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4000 விளையாட்டு வீரர்கள்

வரும் பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை ’கேலோ’ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதன் தொடக்க விழா ஒடிசாமாநிலத்தின் புவனேஸ்வர் நகரத்தில் நடக்கவிருக்கிறது. இந்த போட்டிகளில் 176 இந்தியபல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவிருக்
கிறார்கள். அவர்கள் 17 விதமான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள்.

சென்னை பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தங்களுடைய விளையாட்டு வீரர்களை இந்தப் போட்டிக்கு அனுப்பிவைப்பார்கள். இது குறித்து இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்சந்திப் பிரதான் கூறுகையில், “நடக்கவிருக்கும் முதல் ‘கேலோ’ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க176 பல்கலைக்கழகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

இது 25 வயதுக்கு உட்பட்ட இந்திய இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை 17 விதமான விளையாட்டுப் பிரிவுகளில் அரங்கேற்ற அற்புதமான வாய்ப்பாகும். விளையாட்டுத் துறையில் இந்நிகழ்ச்சி புதியபுரட்சியை ஏற்படுத்த விருக்கிறது என்பது உறுதி.

பல்கலைக்கழக விளையாட்டுகளை பலப்படுத்துதல், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக்கூடிய திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய குறிக்கோளுடன் பலவிதமான விளையாட்டுகளை ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுத்தோம். ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டு வீரர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கும் வழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகிறது” இவ்வாறு சந்திப் பிரதான் தெரிவித்தார்.

நடக்கவிருக்கும் ‘கேலோ’ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, வாள்வீச்சு, ஜூடோ, நீச்சல் போட்டி, பளுதூக்குதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னீஸ், டென்னீஸ், கைப்பந்து, ரக்பி, கபடி ஆகிய 17 விளையாட்டுப் பிரிவுகளில் வீரர்கள் போட்டியிடுவார்கள்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x