Published : 28 Jan 2020 05:40 PM
Last Updated : 28 Jan 2020 05:40 PM

காணி இனத்தில் இருந்து காவலர் வரை: அரசுப் பணிக்குத் தேர்வான பழங்குடிப் பெண்கள்!

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், வனத் துறை தேர்வெழுதி வனக் காவலராகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக வனத்துறையில் காலியாக இருந்த 527 வனக்காவலர் பணியிடங்களுக்கு கடந்த 2019- ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. வனத்துறைப் பணியிடங்களில் மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

மலைவாழ் மக்களுக்கு 99 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே வசிக்கும் காணி பழங்குடி இனத்தைச் சேர்ந்த‌ அனுஜா, ஜெயா எனும் இரு பெண்கள், வனக் காவலர் தேர்வில் வெற்றி பெற்று பணிக்குத் தேர்வாகியுள்ளனர்.

தனியார் பயிற்சி மையம் காட்டுக்குள் தினந்தோறும் பயணம் செய்து, 35 மலைவாழ் மக்களுக்குப் பயிற்சி அளித்தது. இந்நிலையில், முதல்கட்டமாக இரண்டு பெண்கள் அரசுப் பணியில் இணைந்துள்ளனர். அனுஜா, ஜெயா ஆகியோருக்கான பணி ஆணையை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x