Published : 28 Jan 2020 02:05 PM
Last Updated : 28 Jan 2020 02:05 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: அதிகமாக உள்ள வூஹான் நகரில் சீன பிரதமர் நேரில் ஆய்வு

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு80 பேர் உயிரிழந்த வூஹான் நகரத்துக்கு சீன பிரதமர் லி கெகியாங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரத்தில் கரோனா வைரஸ்பாதிப்பில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,744 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 461 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மேலும், 30,453 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 14 நாட்களே ஆனநிலையில், அது வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், நோய் பாதிப்புமற்றும் மருத்துவ வசதி குறித்து பார்வையிட, சீனாவின் பிரதமர் லி கெகியாங் நேற்று வூஹான் நகரத்துக்கு சென்றார்.

இவர் கரோனா கிருமியை கட்டுபடுத்தும் உயர்மட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, சீன அரசு வெளியிட்ட அறிவிப்பில், “லி கெகியாங் வூஹான் நகரத்துக்கு சென்று நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களைச் சந்தித்தார். அதேபோல், ஜின்யின்டன்மருத்துவமனையின் ஊழியர்களிடம், உயிரைக் காப்பாற்ற நீங்கள் எல்லாவழிகளிலும் முயற்சி செய்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும்போது, ​​உங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்று கூறப்பட்டுள்ளது.

சீன அரசின் உயரிய பதவியில்உள்ள லி கெகியாங் நோய் பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாகசென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை தாண்டி கரோனா வைரஸ் பாதிப்புக்கு தாய்லாந்து (7 பேர்),ஜப்பான் (3), தென் கொரியா (3),அமெரிக்கா (3), வியட்நாம் (2),ஆஸ்திரேலியா (4), சிங்கப்பூர் (4),மலேசியா (3) உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x