Published : 27 Jan 2020 11:58 AM
Last Updated : 27 Jan 2020 11:58 AM

வேலை வேண்டுமா?- பொறியியல் முடித்தவர்களுக்கு வேலை; 1,060 பணியிடங்கள்

பொறியியல் முடித்தவர்களுக்கு 1,060 பணியிடங்களுடன் விரிவுரையாளராக அரசு வேலைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கட்டணம் ரூ.300 ஆக உள்ளது. பொறியியல் துறை விரிவுரையாளர் பணிக்கு குறைந்தபட்சம் பி.இ./ பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத விரிவுரையாளர் பணிக்கு எம்.ஏ./ எம்.எஸ்சி/ எம்காம்/எம்.பில். ஆகிய ஒரு துறையில் பயின்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் இதற்கான தேர்வு மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 57-க்குள் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைனில் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x