Published : 27 Jan 2020 10:33 AM
Last Updated : 27 Jan 2020 10:33 AM

கரோனா வைரஸ் பரவுவதால் டிஸ்னிலேண்ட் மூடல்

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் அதிகளவில் கூடும் ஹாங்காங் டிஸ்னிலேண்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

டிஸ்னிலேஸ்ட் பொழுதுபோக்குபூங்கா உலகம் முழுவதும் மிகவும்பிரபலமானது. அதன்படி, சீனாவின்சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் நகரில் உள்ள ‘ஹாங்காங் டிஸ்னிலேண்ட்’ பூங்காவுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 34, 000 மக்கள் வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல்வேறு பகுதிக்குபோக்குவரத்து தடை மற்றும்அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்கள் ஒன்றாக கூடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஹாங்காங் நகரத்திலும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங் மாகாணத்தில் இதுவரை 5 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் அதிவிரைவு ரயில் மூலம் ஹாங்காங்குக்கு சீனாவின் மத்திய பகுதியில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஹாங்காங், டிஸ்னி லேண்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹாங்காங் மாநிலத்தில் முக்கியசுற்றுலா தளமாக ஹாங்காங் டிஸ்னி லேண்ட் உள்ளது.

பணம் திருப்பி தரப்படும்

இதுதொடர்பாக டிஸ்னிலேண்ட் கூறுகையில், “பொதுமக்கள் நலன் கருதி டிஸ்னிலேண்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பூங்காவுக்காக முன்பதிவு செய்துள்ள மக்களின் பணம் விரைவில் திருப்பி தரப்படும்” என்று அறிவித்துள்ளது.

அதேபோல், ஓசன் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவ்விரண்டு பூங்காவும் சீனாவின் பெரும் சுற்றுலா தளமாகும். இதன்மூலம், ஆண்டுக்கு சராசரியாக 130 கோடி அமெரிக்க டாலர் வருமானம் சீனாவுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஷாங்காய் டிஸ்னிலேட் கடந்த சனிக்கிழமை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x