Published : 27 Jan 2020 10:29 AM
Last Updated : 27 Jan 2020 10:29 AM

கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்திய பிரதேச அரசு பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு கட்டாயம்

மத்திய பிரதேசத்தில் உள்ளஅரசு பள்ளிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையைமாணவர்கள் சனிக்கிழமை தோறும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

அம்பேத்கர் தலைமையில் குழு

அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர். இவரது தலைமையில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே. எம். முன்ஷி,சையது முகமது சாதுல்லா, மாதவராவ் வி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இணைந்து உருவாக்கியதே இந்திய அரசியலமைப்புச் சட்டமாகும்.

இதன் முகப்புரையில் அரசியலமைப்புச் சட்டம் குறித்த அறிமுகம் இடம் பெற்றுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளமுகப்புரை பெரிதும் உதவுகிறது.அதில், ‘இந்தியா என்பது இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய நாடு’ என்று குறிப்பிட்டிருக்கும்.

இதனை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வசதியாக, பள்ளிகளில் காலையில் நடக்கும் பிராத்தனை கூட்டங்களில் வாசிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இதனைதொடர்ந்து, ஜனவரி 26-ம் தேதிக்கு பிறகு, அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பதுகட்டாயமாக்கப்படும் என்று மகா ராஷ்டிரா அரசும் அறிவித்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச பள்ளிகளிலும் அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை கூட்டம்

இதுதொடா்பாக மத்திய பிரதேச பள்ளிக் கல்வித் துறைவெளியிட்ட அறிவிப்பில், “பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களின் வழிகாட்டுதல் மூலம், தொடக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் சனிக்கிழமை காலை பிராா்த்தனை கூட்டத்தின்போது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவா்கள் வாசிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 25-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x