Published : 24 Jan 2020 12:13 PM
Last Updated : 24 Jan 2020 12:13 PM

மொழிபெயர்ப்பு: யோகக் கலையின் வரலாற்றை புதிய கோணத்தில் சொல்லும் புத்தகம்

New book to chronicle history of Yoga

New Delhi

From the caves and forests of ancient India to the gyms, studios and village halls of the modern West, a new book unravels how the practice of Yoga reached its present-day ubiquity. Touted to be the "first definitive history" of Yoga, "The Story of Yoga: From India to the Contemporary World" has been written by Scottish cultural historian Alistair Shearer, and will hit the stands later this month, announced publishing house Penguin Random House.
"This is not a 'how to' book -- there are already more than enough of those -- but a 'how come?' one. How come a time-honoured road to enlightenment has
turned into a $25 billion-a-year wellness industry? What have the original teachings of the sages lost, or perhaps gained, while being transplanted onto foreign soil?

"...This book is in part an attempt to define what this thing we call 'yoga' really is," writes the author in its introduction.According to the book, in the US alone, where in the closing decades of the 20th century only a few hundred thousand were engaging in some form of yoga, the number rose to about "4 million" in 2001, and then to over "37 million" by 2016. Another 80 million are 'very interested' in beginning some sort of practice," it said.

- PTI

யோகக் கலையின் வரலாற்றை புதிய கோணத்தில் சொல்லும் புத்தகம்

பழங்கால இந்தியாவின் வனங்களில் மற்றும் குகைகளில் இருந்து நவீன உடற்பயிற்சி மையங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரங்குகள் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கும் யோக கலையின் வரலாற்றை வெளிக்கொணர்ந்துள்ளது, ‘தி ஸ்டோரி ஆஃப் யோகா: ஃப்ரம் இந்தியா டு தி கன்டம்ப்பரரி வர்ள்ட்’ என்ற புதிய புத்தகம். ஸ்காட்லாந்து பண்பாட்டு வரலாற்றாசிரியர் அலிஸ்டேர் ஷியரர் என்பவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தப்புத்தகம் யோக கலையின் துல்லியமான வரலாற்றுப் புத்தகம் என்று சொல்லப்படுகிறது.

பென்குயின் ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகம் இம்மாதம் இறுதியில் வெளிவரவிருக்கிறது. “யோகா செய்வது எப்படி? என்பதுகுறித்த புத்தகம் அல்ல இது. ஏற்கெனவே அந்த தலையில் அளவுக்கு அதிகமான புத்தகள் வெளிவந்துள்ளன. அதற்குப் பதில், முக்தி அடைவதற்கான பெருவழியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட யோகக் கலை இன்று 2500 கோடி டாலர் கொழிக்கும் தொழிற்துறையாக மாற்றப்பட்டது எப்படி என்பதை அலசும் புத்தகம் இது. அந்நிய தேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு பதஞ்சலி யோக முனிவர் முன்மொழிந்த மூல கருத்துக்களில் எவற்றை தொலைத்துவிட்டோம் எவற்றை பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பதைபற்றியும் இப்புத்தகம் பேசுகிறது.

யோகா என்பது உண்மையில் என்னவென்பதை விளக்கும் முயற்சியும் இதில் முக்கிய இடம் வகிக்கிறது” என்று இப்புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். சில லட்சம் அமெரிக்கர்கள் மட்டுமே 20-ம் நூற்றாண்டின் இறுதிவரை ஒரு சில யோகா பயிற்சிகளைப் பின்பற்றி வந்தனர்.

ஆனால், 2001-ம் ஆண்டிலேயே 40 லட்சம் அமெரிக்கர்கள் வரை யோகாவை பின்பற்றத் தொடங்கினர். 2016-ல் அந்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சமாகஉயர்ந்தது. மேலும் 8 கோடி மக்கள் வரை யோகக் கலை மீது ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x